கள்ள புகார்

அரசன் இல்லா ஆட்சி முறை அமலுக்கு வந்த முதல்
அற்புதம் நிகழும் என ஆண்டி முதல் காத்திருந்தோம்
அழகாக சட்டம் செய்து அடுக்கடுக்காய் எழுதி வைத்து
அதுதான் ஆட்சி செய்யும் என்றே அடிகோலினார்

குற்றம் செய்த ஊரில் விசாரிக்க ஆள் இல்லை
கூடியிருந்தோரின் கூற்றையும் கேட்கமுனையவில்லை
கூட்டமாய் பலர் வந்தனர் கூடியிருந்தோரை விரட்டினர்
குறிபல போட்டனர் கோடு போட்டு எழுதினர்

விசாரணை முடிந்ததென விரைப்பாகச் சென்றனர்
குற்றம் செய்த வீட்டில் கும்பலாக குழுமினர்
என்ன செய்தனரோ எவருக்கும் தெரியாது
எழுபது நாள் கழித்து ஓலை பல வந்தது

இல்லாத பெயர்களுக்கே எல்லா ஓலையும் இருந்தது
இதைபெற யாருமில்லை நீதிமன்றமும் செல்லவில்லை
கள்ள புகார் இது என்று காவல்துறை மூடிமறைக்க
குற்றம் செய்த கூட்டம் ஊரில் கொடி கட்டி பறக்குதய்யா

கண்ணில் தூசி விழுந்துவிட்டால் கலங்கும் கண்ணுக்கு
கை விரைந்து சென்று கண்ணை காப்பது போல்
தவறு நிகழ்ந்த இடத்தில் நீதியுரைப்போர் சென்றால் தான்
தரமான நீதியை தாமதமின்றி தரமுடியும் இதுவே தர்மமாம்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jul-20, 10:00 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : kalla pukaar
பார்வை : 35

மேலே