நிறம் மாறும் மனிதர்கள்

சில நேரங்களில்
சில மனிதர்கள்..!

சந்தனத்தை
சேறு என்று
தள்ளி வைப்பார்...!

சில நேரங்களில்
சேற்றையே
சந்தனம் என்று
பூசிக்கொள்வார்...! !

நேரத்திற்கு
ஓரு பேச்சு...
இடத்திற்கு
ஓரு கொள்கை...! !

தேவை என்றால்
தெய்வம் என்பார்
தேவை முடிந்தால்
யார் என்பார்...? ?

நிறம் மாறும்
பச்சோந்தி கூட
தோற்று போனது...!

மனிதனின்
நிறம் மாறும்
குணத்தை கண்டு...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Jul-20, 10:31 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 151

மேலே