புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 21---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௧

201. தன் அம்மாவை அடிக்கும் அப்பாவை எதிர்த்துக் கேட்ட மகன்
அதே செயலை அவன் மகன் செய்தால் தவறு என்கிறான்.

202. பணக்காரனின் தங்கம் பத்திரமாய் பெட்டிக்குள் இருக்கிறது
ஏழையின் தங்கம் அடகு சீட்டாய் பெட்டிக்குள் இருக்கிறது.

203. நீ பொதுவெளியில் அவன், அவள் என்று ஒருமையில் பேசும் போது
உன் மேல் உள்ள மதிப்பு தான் குறைகிறது என்பதை உணர்ந்துகொள்.

204. வெற்றி பெறுவது கடினம் என்று தெரிந்தால்
சட்டம் என்ற பெயரில் சதிகள் செய்வான் சூழ்ச்சிக்காரன்.

205. குறுக்கு வழியில் வெற்றியைத் தேடினால்
தோல்வியை நோக்கியே பயணம் செய்வாய்.

206. முதலாளி முதலாளியாய் யோசிக்கின்ற வரைக்கும்
தொழிலாளியின் கடினங்கள் புரியாது.

207. உன்னை எதிர்ப்பவரைக் கூட ஏற்றுக்கொள்
உன்னைப் போன்றோரை எதிர்ப்பவரை எதிர்த்தே நில்.

208. நீதியைத் தேடுகின்ற பயணத்தில்
ஒரு பொய்யைச் சாகடித்தே பிறக்கிறது உண்மை.

209. ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பதை விட
ஒருவர் வெற்றி பெறக் கூடாது என்ற எண்ணத்தில் வாக்களிப்பதே அதிகம்.

210. நீ உயரத்தைத் தொட முன்னேறும் போதே
உலகம் உன் மேல் சுமை தூக்கி வைக்கிறது.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (9-Jul-20, 11:42 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 87

மேலே