இரா சீ சுகுமாரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இரா சீ சுகுமாரன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 13-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 5 |
இன்பத்திலும்,
துன்பத்திலும்
முடிந்தவரை
அதிகமாக அனுபவிப்பவன்
கவிஞன் மட்டும் தான்..!
தலையை தூக்கிப்பார் ,
விமானச் சத்தம் காதை கிழித்தது..!
சற்றே குனிந்துப்பார் ,
வீதியெங்கும் வீடாய் போனது.....!
தடகடவென ஓடும் …
ரயில்களோ துக்கத்தை தூரமிட்டது ...!
அலாரம் எதுவும் எமக்கில்லை,
தினம் சூரியன் தான் எம்மை எழுப்புது ..........!
தெரு நாய்களும் உறவினர்கள்தான்,
உணவினை நாங்கள் உண்ணும்போது ...!
விடியவிடிய போரிட்டாலும் .,
வெல்வதேனவோ கொசுப்படைதான்..!
தினம் நாங்கள் குளிப்பதில்லை..
இறைவனே மழையை அனுப்பிவைபான்..!
பாசம் அவனுக்கு அதிகமானால்..,
வீதியிலே நீச்சல் குட்டையை கட்டிவைப்பான் …!
ஒரு ரூபாய்க்கு அரிசி………
விலாசம் உள்ளவருக்கு தானா...?
சத்துணவு ………….
குழந்தைகள
பாதமிரண்டும் பாரங்கல்லு ,
கையிரண்டும் கட்டுமரம் ,
உள்ளம்மட்டும் எதுக்கு..
உனக்கு பூவாபோச்சு …..!
கல்லு தூக்கி மூளை இப்போ
நஞ்சி நாராய்ப் போச்சு …!
களிமண்ண சூடுவட்சா..,
செங்கல்லுனு சொன்ன..,
வாழ்கையே சூடுபட்டு…
விரச்சிப்போய் நின்ன...!
வாங்கி வந்த கூலி ..
வீடு வரும்போதே காலி …!
மார்வாடியில் தூங்குது ..,
அவளோட தாலி...!
ஊருக்கே வீடு செய்தவன்..
உனக்கு ஒரு வீடுயில்லை…!
உன்னப்பத்தி நினைத்துபார்க்க
மக்களுக்கு நாதியில்லை .....!
--- இரா.சீ.சுகுமாரன்
சொந்த காலில் நிக்க
தினம் பல புதுமுகம் ..,
அதில் முக்கால்வாசி
நாங்கள்தான் ....!
நான்கு வருடம் .,
தயார்படுத்திய
பந்தய குதிரை .....!
--- இரா.சீ.சுகுமாரன்
மேகங்களை
சிறகினால்
கிழிக்கும்
விமானம்….!
ரோட்டில்
கால்வைத்து
நடக்கும்
இரயில் பயணம் ….!
கடலுக்கு
பெட்ரோல்
போர்வைப்போடும்
கட்டும்மர கப்பல் ….!
ஒசோனை
தகர்த்தெறியும்
முயற்சியில்
தொழிற்சாலை….!
ஒட்டுமொத்த
உறவுக்களையும்
கையில் பூட்டிக்கொண்ட
தொலைப்பேசி ….!
மாட்டுச்சந்தைக்கு
சமமாக
போட்டிபோடும்
போக்குவரத்து ….!
மயான பூமிக்கும்
முகப்பூச்சு
பூசி விற்கும்
ரியல் எஸ்டேட் ….!
பொருளாதாரத்தையும் ,
இன வேறுப்பாடையும்
அழிக்கும் முயற்சியில்
ஆடை ….!
குழந்தையை
வீடு தங்கவிடா
எண்ணத்தில்
பெற்றவர் ….!
காப்பகத்திற்கு
உதவித்தொகை
வழங்கும் ஆச
சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!