கொளுத்து வேலை

பாதமிரண்டும் பாரங்கல்லு ,
கையிரண்டும் கட்டுமரம் ,
உள்ளம்மட்டும் எதுக்கு..
உனக்கு பூவாபோச்சு …..!
கல்லு தூக்கி மூளை இப்போ
நஞ்சி நாராய்ப் போச்சு …!

களிமண்ண சூடுவட்சா..,
செங்கல்லுனு சொன்ன..,
வாழ்கையே சூடுபட்டு…
விரச்சிப்போய் நின்ன...!

வாங்கி வந்த கூலி ..
வீடு வரும்போதே காலி …!
மார்வாடியில் தூங்குது ..,
அவளோட தாலி...!

ஊருக்கே வீடு செய்தவன்..
உனக்கு ஒரு வீடுயில்லை…!
உன்னப்பத்தி நினைத்துபார்க்க
மக்களுக்கு நாதியில்லை .....!
--- இரா.சீ.சுகுமாரன்

எழுதியவர் : இரா.சீ.சுகுமாரன் (15-Jun-17, 2:02 pm)
பார்வை : 240

மேலே