வறுமைக்கோடு

தலையை தூக்கிப்பார் ,
விமானச் சத்தம் காதை கிழித்தது..!
சற்றே குனிந்துப்பார் ,
வீதியெங்கும் வீடாய் போனது.....!

தடகடவென ஓடும் …
ரயில்களோ துக்கத்தை தூரமிட்டது ...!
அலாரம் எதுவும் எமக்கில்லை,
தினம் சூரியன் தான் எம்மை எழுப்புது ..........!

தெரு நாய்களும் உறவினர்கள்தான்,
உணவினை நாங்கள் உண்ணும்போது ...!
விடியவிடிய போரிட்டாலும் .,
வெல்வதேனவோ கொசுப்படைதான்..!

தினம் நாங்கள் குளிப்பதில்லை..
இறைவனே மழையை அனுப்பிவைபான்..!
பாசம் அவனுக்கு அதிகமானால்..,
வீதியிலே நீச்சல் குட்டையை கட்டிவைப்பான் …!
ஒரு ரூபாய்க்கு அரிசி………
விலாசம் உள்ளவருக்கு தானா...?
சத்துணவு ………….
குழந்தைகளுக்கு மட்டும் தானா...?
கேள்வி கேட்டுக்கேட்டு வாய்தான் வலிக்கிறது...!

இருந்தும் ….,
கலெக்டர் கனவுடன்
கால் பரீட்சை எழுத சென்றிருக்கிறான் ,
என் மகன்
‘காளராவோடு ’……
--இரா.சீ.சுகுமாரன்

எழுதியவர் : இரா.சீ.சுகுமாரன் (15-Jun-17, 2:04 pm)
சேர்த்தது : இரா சீ சுகுமாரன்
பார்வை : 642

மேலே