வெற்றியடையா தோல்விகள்

கல்லுக்கு காணிக்கை போடுபவன்
வறியவர்கட்கு தானமிடுகிறவனிடம் தோற்றுப்போகிறான்...

பெயருக்குப் பின்னால் பட்டம் போட்ட மருத்துவன்
படிப்பற்ற நாடிபிடி வைத்தியனிடம் தோற்றுப்போகிறான்...

அடுக்குமாடி ஆடம்பரப் பள்ளி மாணவன்
அழுக்குப்படிந்த
அரசுப்பள்ளி மாணவனிடம் தோற்றுப்போகிறான்..

முந்நூறு கலைஞர் வைத்து இசைக்கும் இசையமைப்பாளன்
மூன்றே பேர் இசைக்கும் பறையிசை கலைஞர்களிடம் தோற்றுப்போகிறான்...

பிறன்மனையாள் கண்டு தழுவத் துடிப்பவன்
தன் மனையாளிடம் ஆண்மையில் தோற்றுப்போகிறான்...

இச்சைகள் தணிந்ததும் காதலியை புறக்கணிக்கும்
கணினியறிவு காதலன்
காலந்தோறும் கற்பை காக்கும் கடிதாசிக் காதலர்களிடம் தோற்றுப்போகிறான்...

மக்களின் வாக்குப்பிச்சையில் வயிறு வளர்க்கும் வெள்ளாடை மனிதன்
நாளும் உடலுழைத்து வாழும் தினக்கூலியிடம் தோற்றுப்போகிறான்...

ஐந்துக்கும் பத்துக்கும் அப்பாவிகளை அடித்து விரட்டும் காவலன்
தேசத்திற்காய் எல்லையில் மரணிக்கும் இராணுவ வீரனிடம் தோற்றுப்போகிறான்...

ஏற்றம் மாற்றமென இயற்கையை சீர்குலைக்கும் விஞ்ஞானி
நீயும் நானும் நாளும் உயிர்வாழ சேற்றில் தவழும் உழவனிடம் தோற்றுப்போகிறான்...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (15-Jun-17, 4:07 pm)
பார்வை : 112

மேலே