மனித சுபாவம்

மனிதன் தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு அதை போக்குவதற்கு முயற்சிகளாற்றாமல் எந்த நேரமும் பிறர் மீதும், பிற உயிரினங்கள் மீதும் தனது குற்றத்தைச் சுமத்தி வாழ்கிறான்...

நடைபாதையில் மலமே கழிப்பதே குற்றமென்றிருக்க, இந்த மனிதன் ஏன் நடைபாதையில் மலம் கழிக்கக்கூடாது? என்றே வாதிடுகிறான்...

தன்னை பாதிக்காதவரை பிறரை பாதிக்கும் எதையும் சரியென்றே வாதாடுகிறான்.
அந்நிலை தனக்கு ஏற்படும் போதோ தவறென்று உணர்ந்து பதறுகிறான்...

அனைத்து உயிர்களுக்கும் ஆன்மா உண்டென்றும், அவை இறைவனின் அம்சமென்றும் உணர்ந்தாலும்,
எத்தனை தடவை எடுத்துரைத்தாலும் அதை மதிக்காது பிற உயிர்களை இழித்துரைத்து தானே சிறந்தவனென்கிறான்..

வாய்மட்டும் இல்லையென்றால் இந்த மனிதர்களை நாய் கூட மதிக்காதென்பதை அறியாது, தனது நரம்பில்லா நாக்கால் வாய்க்கு வந்தபடி, வாய் பேசமுடியாத உயிர்களின் மீது இழிவுரை பாடுகிறான்...

இறைவனே கூறியதாக சொல்லத் தகாத சொற்களைச் சொல்லும் மதவாதிகளுக்கு தெரியவில்லை, சத்தியமாக அவை இறைவனிடமிருந்து வந்த வார்த்தைகளாக இராதென்று நமக்கு தெரியுமென்று...

வார்த்தைகளில் உள்ள உண்மை, அன்பு, சத்தியம், ஞானம் ஆகியவற்றைக் கொண்டே உண்மையான நம்பிக்கை உண்டாகிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jun-17, 7:27 pm)
பார்வை : 601

மேலே