Venkatesh Vinith - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Venkatesh Vinith |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Venkatesh Vinith செய்திகள்
சென்றான் அவன்
சராசரிகள் காட்டாத ஒரு அழகு பாதையில்
தொட்டால், சிலிர்த்து மனம் மென்மையாகும்
ஒரு கிகிமுகி பகிபகி துணியை கண்டெடுத்து
அவர்களிடத்து காட்டியபோது
உங்களை போல
அவர்களுக்கும் வினோதமாகத் தான் இருந்தது அத்துணி.
அவ்விடத்தில் இருக்கும் அசிங்கத்தைக்கூட
துடைக்க பயன்படாது தூக்கி தூற எறி என்றார்கள்
அத்துணியிலிருந்த ஒரு இழைையை
தூக்கு கயிறாக்கி கொண்டு இறந்த அவனை
கிகிமுகி பகிபகி துணி கொண்டே மூடி புதைக்கும் முன்
"இது சாவுக்காண வழி " என்று
அவன் பாதையின் முன் பதாகையொன்றை வைத்தனர் சராசரிகள்
முடிந்தது கடமை
முதிர்ந்த பழுப்பு நிற இலை ஒன்றுக்கு
ஊசலாம் அதன் இறுதி ஊர் வலம்
அழவில்லையே அதன் சகாக்கள், ஏன் ?
அழுதிருக்கலாம் ஒரு வேலை
வேறு மொழியில்
- வெங்கடேஷ் (எவனோ ஒருவன்)
கருத்துகள்