சராசரிகளின் பெறுநாள்

சென்றான் அவன்
சராசரிகள் காட்டாத ஒரு அழகு பாதையில்
தொட்டால், சிலிர்த்து மனம் மென்மையாகும்
ஒரு கிகிமுகி பகிபகி துணியை கண்டெடுத்து
அவர்களிடத்து காட்டியபோது
உங்களை போல
அவர்களுக்கும் வினோதமாகத் தான் இருந்தது அத்துணி.
அவ்விடத்தில் இருக்கும் அசிங்கத்தைக்கூட
துடைக்க பயன்படாது தூக்கி தூற எறி என்றார்கள்
அத்துணியிலிருந்த ஒரு இழைையை
தூக்கு கயிறாக்கி கொண்டு இறந்த அவனை
கிகிமுகி பகிபகி துணி கொண்டே மூடி புதைக்கும் முன்
"இது சாவுக்காண வழி " என்று
அவன் பாதையின் முன் பதாகையொன்றை வைத்தனர் சராசரிகள்

எழுதியவர் : (15-May-15, 11:54 am)
சேர்த்தது : Venkatesh Vinith
பார்வை : 79

மேலே