அதனாலென்ன

மும்மாரி மாறி பொழியட்டும்
அதனாலென்ன
மழை
பொழிந்தால் போதும்

முத்தமிழும் தப்பி எழுதப்படட்டும்
அதனாலென்ன
மொழி
வாழ்ந்தால் போதும்

விதிகள் சதிகளில் சாகட்டும்
அதனாலென்ன
சட்டம்
இருந்தால் போதும்


வழக்குகள் வழக்காடி வயதாகட்டும்
மேல்முறையிட்டில் தள்ளாடி வீழட்டும்
அதனாலென்னா
நீதி
நாதியற்று போனாலென்ன?
அநீதியெனும் விபாச்சாரி மடிதனில்
நீதித் தேவன் மயக்கமடைந்தாலென்ன? .

தேவனின் மயக்கம் தெளிவதில்லை
தெளிந்தாலும் புரிவதில்லை.
அதானலென்ன ?

எனக்கென்ன உனக்கென்ன
எதுவென்று எதுவும் போனாலென்ன?
இந்த நிமிடத்தில்
சோற்றுக்கு எமக்கு பஞ்சமில்லை

அதானலென்ன ?
அரசாங்கம் ஊழல் குழியில் வீழ்ந்தாலென்ன?
மயானத்தில் தொலைந்தாலென்ன?

வாட்ஸ் அப்பில் நயந்தாரா விவாகமும்
முகநூலில் திரிஷா விவாகரத்தும்
சுடச்சுட வருகிறது
வாருங்கள் தோழர்களே!
ஜனநாயகத்தை எரித்து
குளிர்க்காய்வோம்..



-வியன்.

எழுதியவர் : வியன் (15-May-15, 12:36 pm)
பார்வை : 108

மேலே