இதுவும் நடக்கலாம்
அந்த வருங்காலத்தில்,
கஞ்சிக்கு ஒரு கொட்டாங்குச்சி கூட
இல்லாமல் வெறும் கையை
ஏந்துதி நிற்கிறது ஒரு நீண்ட வரிசை...
மனிதக் கறி கூட
சுவையாகிப் போகும் அளவு
அங்கு பசியும் பட்டினியும்...
என்றாவது ஒருநாள்
உணவுப் பொட்டலங்கள்
வானூர்திகளில் தூவப்படலாம்..
படாமலும் போகலாம்...
உடலை ஒட்டிய கிழிந்த உடை
வெப்பத்திலும் குளிரிலும்
பாதுகாக்கத் தவறும்...
காமம் கூட அறவே வெறுக்கப் படும்...
அந்த மொட்டை வெயிலின் உக்கிரம்
உங்களுக்குள் முழுவதுமாக இறங்கி
நீர்த் தேவையை உண்டாக்கலாம்...
அந்த நேரம் மிகவும் விரும்பப் படுவது
மரணமாகவே இருக்கும்...
அதுகூட உடனடியாக கிடைக்காது...
தாராள மயமாக்களாய்
கோடிகளை வீணடித்து
இல்லாதோரிடம் மிடுக்கைக்
காட்டும் நேற்றைய "உயர்ந்த வர்க்க" மனிதர்களே...
சீக்கிரம் வரிசையில் நில்லுங்கள்..
உங்களுக்கும் ஒருவேளை ஒரு வேளை
கஞ்சி கிடைக்கலாம்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
