kaarthik - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kaarthik |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 30-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-May-2014 |
பார்த்தவர்கள் | : 216 |
புள்ளி | : 102 |
நான் கார்த்திக். மென்பொருள் துறை என் பிழைப்பு மட்டுமே. மற்றபடி சாதாரண தமிழ் மாணவன். ஜாவாவில் மொழிந்த பத்தாயிரம் வரிகளை விட, எனக்கு தமிழ் எழுத்துக்களே ஆனந்தமானவை. ஆத்மார்த்தமானவை.தங்கள் பின்னூட்டங்களும் கருத்துக்களும் குறைந்தபட்சம் என்னை இந்த மாணவன் என்ற நிலையிலாவது நிற்க வைக்கும்.
அந்த ஸ்மார்ட் சிட்டியின் அழகான சாலைகளின்,
குண்டு ,குழி பெரிய பள்ளங்களிலும் ,
பின்னாலே வந்த தேசிய லாரியின் டயர்களிலும்,
சிவப்பு விளக்கில் விதிமீறல் செய்த பேருந்திலும் ,
மேகங்களை கக்கிக் கொண்டு சென்ற அந்தக் கால ஸ்கூட்டியிலும் ,
கடைசியாக பெய்த மழையின் சேற்றுச் சகதியிலும்
தப்பித்த இந்த மாண்புமிகு உயிரானது,
பிழைக்கத் தவறிக் கொண்டிருக்கிறது
சராசரியாக நிமிடத்திற்கு பத்து முறை,
பெண்ணே உன் இமையசைவில்!!!
அந்த ஸ்மார்ட் சிட்டியின் அழகான சாலைகளின்,
குண்டு ,குழி பெரிய பள்ளங்களிலும் ,
பின்னாலே வந்த தேசிய லாரியின் டயர்களிலும்,
சிவப்பு விளக்கில் விதிமீறல் செய்த பேருந்திலும் ,
மேகங்களை கக்கிக் கொண்டு சென்ற அந்தக் கால ஸ்கூட்டியிலும் ,
கடைசியாக பெய்த மழையின் சேற்றுச் சகதியிலும்
தப்பித்த இந்த மாண்புமிகு உயிரானது,
பிழைக்கத் தவறிக் கொண்டிருக்கிறது
சராசரியாக நிமிடத்திற்கு பத்து முறை,
பெண்ணே உன் இமையசைவில்!!!
கண்ணனுக்கும் ராதாவுக்கும்
வாக்குவாதம்
ஒருவர் மேல் ஒருவர் கொண்ட
அன்பில் யார் பெரியவர் என...
ஒரு கட்டத்தில்
ஆவேசமடைந்த கண்ணன்
தன் அன்பின்மேல் ஆணையிட்டு
விண்நோக்கி விரல் நீட்ட
மாரியைப் பொழிந்தாள் விண்ணவள்...
மண்ணை அடைந்த தூயநீர்
புதைந்திருந்த விதைகளுக்கு உயிரளித்தது.
அதன் யௌவன பசுமையிலும்,
அழகாய் பூத்துக் குலுங்கிய
வண்ண மலர்களின் மணத்திலும்
தன் அன்பை உவமையாக்கினான் கோபக்கார கண்ணன்..
ராதாவோ கொஞ்சும் தேன் குரலில்
உங்கள் அன்பே எனதினும் பெரிதென்றாள்..
கண்ணன் அகமகிழ்ந்தான்,
ராதாவின் ராதாவின் அன்பை எண்ணி..
அந்த வருங்காலத்தில்,
கஞ்சிக்கு ஒரு கொட்டாங்குச்சி கூட
இல்லாமல் வெறும் கையை
ஏந்துதி நிற்கிறது ஒரு நீண்ட வரிசை...
மனிதக் கறி கூட
சுவையாகிப் போகும் அளவு
அங்கு பசியும் பட்டினியும்...
என்றாவது ஒருநாள்
உணவுப் பொட்டலங்கள்
வானூர்திகளில் தூவப்படலாம்..
படாமலும் போகலாம்...
உடலை ஒட்டிய கிழிந்த உடை
வெப்பத்திலும் குளிரிலும்
பாதுகாக்கத் தவறும்...
காமம் கூட அறவே வெறுக்கப் படும்...
அந்த மொட்டை வெயிலின் உக்கிரம்
உங்களுக்குள் முழுவதுமாக இறங்கி
நீர்த் தேவையை உண்டாக்கலாம்...
அந்த நேரம் மிகவும் விரும்பப் படுவது
மரணமாகவே இருக்கும்...
அதுகூட உடனடியாக கிடைக்காது...
தாராள மயமாக்களாய்
கோட
ஒவ்வொரு தோட்டாவின்
துளைக்கும் முனையும்
துரிதமான வரங்கள்...
ஒவ்வொரு உறைவாளின்
கூர்மையான பக்கங்களும்
புனித பொக்கிஷங்கள்...
ஒவ்வொரு அணுகுண்டின்
சக்திவாய்ந்த அணுத்துகள்களும்
கடும்தவத்தின் நன்மைகள்....
ஒவ்வொரு ஏவுகணையின்
சுமப்பில் செல்லும் ஆயுதங்களும்
அழகிய அட்சயங்கள்...
ஒருவேளை யாவும்,
அன்பென்ற பெட்டிக்குள்
பூட்டப் பட்டிருக்கும் வரை...
மேலும் இவை மாபேறு பெற்றவை..
இன்னும் அதிநவீன சிந்தனைகளால்
உருவாக்கப் பட்டிருக்காத வரை...
ஒவ்வொரு தோட்டாவின்
துளைக்கும் முனையும்
துரிதமான வரங்கள்...
ஒவ்வொரு உறைவாளின்
கூர்மையான பக்கங்களும்
புனித பொக்கிஷங்கள்...
ஒவ்வொரு அணுகுண்டின்
சக்திவாய்ந்த அணுத்துகள்களும்
கடும்தவத்தின் நன்மைகள்....
ஒவ்வொரு ஏவுகணையின்
சுமப்பில் செல்லும் ஆயுதங்களும்
அழகிய அட்சயங்கள்...
ஒருவேளை யாவும்,
அன்பென்ற பெட்டிக்குள்
பூட்டப் பட்டிருக்கும் வரை...
மேலும் இவை மாபேறு பெற்றவை..
இன்னும் அதிநவீன சிந்தனைகளால்
உருவாக்கப் பட்டிருக்காத வரை...
அந்த மாபெரும் நூலகத்தில்
அத்தனை புத்தகங்களும்
எழுத்தரசர்களால் எழுதப்பட்டவை...
அதனூடே ஒரு புதுக்கவிஞனின்
எவ்வளவு தரமான கவிதைப் புத்தகமும்
அங்கீகாரமற்றுப் போகும்,
உன் துளிப் புன்னகைமுன்
என் மொத்தத் திமிரினைப்போல்...
மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலோடு
மனிதனுக்கும் இயற்கைக்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் மண்ணிற்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் விலங்களுக்குமான ஒரு காதலை
துரிதகதியில் புரிதலோடு காதலிப்போம் வாருங்கள்..!
மழைசிசுக்களின்றி மலட்டுத்தன்மையாகும் மேகமங்கையினை
மரம் செடிகொடியெனும் மருத்துவம் விதைத்து காதலிப்போம்.
தாபங்கொண்டு பொசுங்கி சுருங்கும் ஐநிலப்பெண்டிரை
நெகிழி கழிவுகளெனும் குரோதம் தவிர்த்து காதலிப்போம்.
வெப்பச்சூட்டில் வறண்டுத்தவிக்கும் விலங்கின ஜீவன்களை
அவசர அக்கறையெனும் காக்கும் கரங்கொடுத்து காதலிப்போம்.
கதிர்வீச்சில் கருவறுத்து துடிதுடிக்கும் பறவையின செல்லங்களை
மாற்று விஞ்ஞானமெனும் முத
மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலோடு
மனிதனுக்கும் இயற்கைக்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் மண்ணிற்குமான ஒரு காதலை
மனிதனுக்கும் விலங்களுக்குமான ஒரு காதலை
துரிதகதியில் புரிதலோடு காதலிப்போம் வாருங்கள்..!
மழைசிசுக்களின்றி மலட்டுத்தன்மையாகும் மேகமங்கையினை
மரம் செடிகொடியெனும் மருத்துவம் விதைத்து காதலிப்போம்.
தாபங்கொண்டு பொசுங்கி சுருங்கும் ஐநிலப்பெண்டிரை
நெகிழி கழிவுகளெனும் குரோதம் தவிர்த்து காதலிப்போம்.
வெப்பச்சூட்டில் வறண்டுத்தவிக்கும் விலங்கின ஜீவன்களை
அவசர அக்கறையெனும் காக்கும் கரங்கொடுத்து காதலிப்போம்.
கதிர்வீச்சில் கருவறுத்து துடிதுடிக்கும் பறவையின செல்லங்களை
மாற்று விஞ்ஞானமெனும் முத
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
இத்தளத்தில் காற்றில் மிதக்கும் இறகு என்ற தலைப்பில் ஏற்கனவே இரண்டு கவிதைகள் பதிவு செய்திருக்கிறேன்.
தளத்தின் பிற நண்பர்களும் இந்த தலைப்பில் கவி புனைந்திருக்கிறார்கள் .
தோழர் ஜின்னா, தோழர் சரவணா , தோழர் பொள்ளாச்சி அபி , தோழர் முரளி , தோழர் ராஜ்குமார் , தோழி வித்யா , தோழி கிருத்திகா இதே தலைப்பில் தொடர்ச்சியாகவும் , தோழர் கருணாநிதி , தோழி உமா , தோழி சித்ரா ஆகியோரும் இந்த தலைப்பின் ஈர்ப்பினால் கவி புனைந்துள்ளர்கள் , இதுவரை கவி பதிவு செய்த அனைத (...)
ஒரு கவிதை திருடும் தனி மனிதனை கூட நாம் ஒன்றும் செய்ய முடியாது எனும்போது எதற்கு எழுத வேண்டும் ?
நாம் எழுதும் அத்துணையும் வருங்காலத்திற்கு வரலாறு . அந்த வரலாறில் வேறு எவன் பெயரோ இருக்கப் போகிறது .
தளம் பலம் பெற வேண்டும் .