நவீன ஆயுதங்கள்

ஒவ்வொரு தோட்டாவின்
துளைக்கும் முனையும்
துரிதமான வரங்கள்...

ஒவ்வொரு உறைவாளின்
கூர்மையான பக்கங்களும்
புனித பொக்கிஷங்கள்...

ஒவ்வொரு அணுகுண்டின்
சக்திவாய்ந்த அணுத்துகள்களும்
கடும்தவத்தின் நன்மைகள்....

ஒவ்வொரு ஏவுகணையின்
சுமப்பில் செல்லும் ஆயுதங்களும்
அழகிய அட்சயங்கள்...

ஒருவேளை யாவும்,
அன்பென்ற பெட்டிக்குள்
பூட்டப் பட்டிருக்கும் வரை...

மேலும் இவை மாபேறு பெற்றவை..
இன்னும் அதிநவீன சிந்தனைகளால்
உருவாக்கப் பட்டிருக்காத வரை...

எழுதியவர் : கார்த்திக் (11-May-15, 10:48 am)
Tanglish : naveena aayuthankal
பார்வை : 91

மேலே