பிழைக்கத் தவறும் உயிர்

அந்த ஸ்மார்ட் சிட்டியின் அழகான சாலைகளின்,
குண்டு ,குழி பெரிய பள்ளங்களிலும் ,
பின்னாலே வந்த தேசிய லாரியின் டயர்களிலும்,
சிவப்பு விளக்கில் விதிமீறல் செய்த பேருந்திலும் ,
மேகங்களை கக்கிக் கொண்டு சென்ற அந்தக் கால ஸ்கூட்டியிலும் ,
கடைசியாக பெய்த மழையின் சேற்றுச் சகதியிலும்
தப்பித்த இந்த மாண்புமிகு உயிரானது,
பிழைக்கத் தவறிக் கொண்டிருக்கிறது
சராசரியாக நிமிடத்திற்கு பத்து முறை,
பெண்ணே உன் இமையசைவில்!!!

எழுதியவர் : கார்த்திக் (28-Nov-15, 12:20 am)
பார்வை : 60

மேலே