நிழலித்து
ஒரு தாயின் அருகில்
அமைதி கொள்ளும்
குழந்தை போல்
எப்போதும்
அடர்ந்த மரமொன்றின் நிழலில்
குந்திக்கொள்கிறது
இந்த ஓலைக் குடில் ....
இருந்தும் பெருந்தரையை
தனதிருத்தி தாங்கி நிற்கும்
தனக்குள்ளே பொறாமைத்தீ
வெறும் இரண்டரை அடி
விழுங்கி
முழுசாய் நிழலித்து நிற்கும்
கருணையை வியந்து முழிக்கிறது
வெற்றுப் பார்வையோடு