அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள். இத்தளத்தில் காற்றில்...
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
இத்தளத்தில் காற்றில் மிதக்கும் இறகு என்ற தலைப்பில் ஏற்கனவே இரண்டு கவிதைகள் பதிவு செய்திருக்கிறேன்.
தளத்தின் பிற நண்பர்களும் இந்த தலைப்பில் கவி புனைந்திருக்கிறார்கள் .
தோழர் ஜின்னா, தோழர் சரவணா , தோழர் பொள்ளாச்சி அபி , தோழர் முரளி , தோழர் ராஜ்குமார் , தோழி வித்யா , தோழி கிருத்திகா இதே தலைப்பில் தொடர்ச்சியாகவும் , தோழர் கருணாநிதி , தோழி உமா , தோழி சித்ரா ஆகியோரும் இந்த தலைப்பின் ஈர்ப்பினால் கவி புனைந்துள்ளர்கள் , இதுவரை கவி பதிவு செய்த அனைத்து நண்பர்கள் , தோழிகள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள் . இறகுடன் தங்களும் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி .
தற்போது இறகின் பயணத்தை தொடர கீழ்க்கண்ட நண்பர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் .
தேடல் -9 தோழர் மணிமீ( மணிகண்டன் )
தேடல் -10 தோழர் ஷர்மா
தேடல் -11 தோழி புவன சக்தி
தேடல் - 12 தோழர் லெனின்
தேடல் -13 தோழி சித்ராசங்கர்
ஆகியோர் காற்றின் பயணத்தை தொடர்வார்கள் , இவர்களை தொடர்ந்து எழுத விரும்பும் நண்பர்கள் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
இந்த இறகுகள் மிதப்பது காதலுக்காக அல்ல , சமுதாய சிந்தனைகளை , சமுதாய மாற்றம் வேண்டும் கருத்துக்களை , நோக்கியே. நண்பர் ராம் வசந்த் இளைய கவிகளின் கவி பதிவிற்கு பின்னர் தனது கவியினை பதிவுசெய்வார் .
வாருங்கள் தமிழால் இணைவோம் , கவிகள் பொழிவோம்
உங்களில் ஒருவனாய் காற்றில் மிதக்கும் இறகின் ரசிகனாய்
குமரேசன் கிருஷ்ணன் .