யார் அன்பில் பெரியவர்

கண்ணனுக்கும் ராதாவுக்கும்
வாக்குவாதம்
ஒருவர் மேல் ஒருவர் கொண்ட
அன்பில் யார் பெரியவர் என...
ஒரு கட்டத்தில்
ஆவேசமடைந்த கண்ணன்
தன் அன்பின்மேல் ஆணையிட்டு
விண்நோக்கி விரல் நீட்ட
மாரியைப் பொழிந்தாள் விண்ணவள்...
மண்ணை அடைந்த தூயநீர்
புதைந்திருந்த விதைகளுக்கு உயிரளித்தது.
அதன் யௌவன பசுமையிலும்,
அழகாய் பூத்துக் குலுங்கிய
வண்ண மலர்களின் மணத்திலும்
தன் அன்பை உவமையாக்கினான் கோபக்கார கண்ணன்..
ராதாவோ கொஞ்சும் தேன் குரலில்
உங்கள் அன்பே எனதினும் பெரிதென்றாள்..
கண்ணன் அகமகிழ்ந்தான்,
ராதாவின் ராதாவின் அன்பை எண்ணி..

எழுதியவர் : கார்த்திக் (8-Aug-15, 5:44 am)
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே