இதயத்தின் ஓசைகள்

வார்த்தைகளைத் தேடி
அமைக்கவில்லை இந்த வரிகள்
வாழ்கையில் நீ எனக்கு
அளித்த இன்பத்தினால்
இவன் இதயத்தின்
ஓசைகள் இவைகள்....!!
என் விழி தொட்டு
உயிர் கலந்து ,
என் வாழ்வின்
வழியாகி எந்தன்
விழியாகி,
மனதில் என்னை
சுமந்து என்னால்
கரு சுமந்து ,
வலி பல
பொறுத்து,
நான் உறங்க
அவள் விளித்து ,
இச்ஜென்மம் நான்
ஜெயிக்க
விரதம் பல புரிந்து ,
என் மனைவியாக மட்டும்
இல்லமால்
என்னை மகனாக்கி ,
நான் தவிக்கும் போதெல்லாம்
தலை கோதி,
சோறூட்டி ,
மடி சாய்த்து,
தாயாய்
என்னைக் காத்து ,
தவறு சில நான்
புரிந்தாலும்
தனிமையில் அழுது...
"தன் இமையில்"
அதைக் காட்டாமல்
என்னை அணைத்து
எனக்காகவே ...
எனக்காக மட்டுமே
வாழும்
அந்த தெய்வம் தந்த
என் தெய்வம்
என் தாரம் ....!!
என்றோ நான் செய்த
சிறு புண்ணியம்
இன்று
என் மனைவியாய்,
மகளாய் ,
தோழியாய்,
சகோதரியாய்,
தாயாய்,....-அவள்
எனக்கு கிடைத்தது
இறைவன் எனக்கு
அளித்த வரம் ....
அவள் வாழ
மட்டுமே துடிக்கும்
இவன் இதயம்
என்றும்....என்றென்றும்...
ஜீவன்