நினைத்தொன்று சொல்வாய் நெஞ்சே
முகில் சிந்தும் நேரம்
பகல் பூட்டியே தீரும்
தகவல் எதுவும் இன்றி
துகள் துகளாய்
என்னை கடத்தியவள் தேடி
என் நெஞ்சே நீ போகிறாய்
அவள் விழி வழியில் தெரியவே
அவசரமாய்
என் விழிகளை ஏன் விட்டுச் செல்கிறாய்
யாக்கை கொளுத்தும் வேட்கையால்
உன் காட்டை பிரிந்து போகிறாய்
நெஞ்சே எந்த பாதை வழி போகிறாய்
அந்த தடங்களை ஏன் அழிக்கிறாய்
நினைத்தொன்று சொல்வாய் நெஞ்சே
என் நினைவுகளை திருடும்
காதல் வண்டாய் வந்தவள்
என் காற்றையும் கடத்திப் போனாள்
வெறும் இறகுகள் விட்டுச் சென்றாள்
அவள் அறிகுறிகள்
என் உயிரில் எழுதிக் கிடக்கிறது
இரவில் புகுந்து தவிக்கிறேன்
அவள் நினைவு வாய்கள்
சிந்தும் துளிகளை
காண மகிழ்கிறேன்
என்னுள்ளே அவளை
தேடித் தேடி அலைகிறேன்
கண் சிமிட்டிய நேரத்தில்
கண் கடந்து
உயிர் கலந்து விட்டாள்
என் உயிர் ரேகையின்
பாதை மாற்றிவிட்டாள்
அவளிடம் மட்டும் சேரும்
அவஸ்தையை அவசியம் ஆக்கிவிட்டாள்
என்னை மிதக்க வைக்கும்
காற்றாய்
அவள் சிறு பார்வை
மோகப் பூவாய்
அவள் சிறு புன்னகை
மோகத் துண்டாய் வந்தவள்
என்னை மோதிக் கடந்தவள்
என் நெஞ்சு நேர்பவள்
விஞ்சும் அழகால்
நான் கெஞ்சும் நஞ்சு அவள்