கனவுகள் கலைப்பவன்
கனவுகள் கலைப்பவன்
அதிகாலை உறக்கத்தில்
உன்னைப் பற்றிய கனவுதான்
கலைத்துவிடுகிறது உன்னுடைய
அலைப்பேசி அழைப்பு
காலையில் கூந்தலின் ஈரம் காயும் தருணங்களில்
தண்ணீர் துளிகளினூடே
உன்மீதான கனவுதான்
கலைத்துவிடுகிறது உன்னுடைய
அலைப்பேசி அழைப்பு
மதிய நேரத்து
பேருந்து பயணங்களில்
பின்னோக்கி நகரும் மரங்களின்
ஓட்டத்தில் ஒடும்
கனவு உன்மேல்தான்
கலைத்துவிடுகிறது உன்னுடைய
அலைப்பேசி அழைப்பு
மாலை நேரத்து நடைப்பயணத்தில்
பொன்மஞ்சள் சிவப்பு கனவுகள்
உன் பிம்பம் பற்றியதுதான்
கலைத்துவிடுகிறது உன்னுடைய
அலைப்பேசி அழைப்பு
இரவில் மட்டுமென்ன
விட்டுவிடவா போகிறாய்...
ஒவ்வொரு முறையும்
நான் காணும்
உன்னைப் பற்றிய
கனவுகளை கலைப்பவன்
நீயேதான்