8-8-15 சாய்ந்து படுத்துமது ஒழிப்பு--04

சாய்ந்து படுத்துவிடின் சாதனைகள் தூங்கிவிடும்
ஓய்ந்து கிடப்ப(து) ஒழித்தெழு!- ஆய்ந்துணர்ந்த
போராட்டம் ஒன்றே புதுவாழ்க்கை கொண்டுதரும்!
நீரோட்டம் கண்ணில் நிறுத்து!

சாய்ந்து படுத்துவிடின்= வீட்டினுள் ஒரு ஓரமாகச் சாய்ந்து படுத்தவராக இருந்துவிட்டால்
சாதனைகள் தூங்கிவிடும்= செய்யக் கூடிய நல்ல காரியங்களும் சாதனைகளும் தூக்கம் கொண்டவையாக இருந்துவிடும்;
ஓய்ந்து கிடப்ப(து)= ஆகையினால், செயலற்றவராக வீழ்ந்து கிடப்பதைத் தவிர்ப்பாயாக.
ஒழித்தெழு!=அப்படி இருப்பதை உடனே ஒழித்துக் கட்டி வைத்துவிட்டு எழுவாயாக!
ஆய்ந்துணர்ந்த= நன்கு ஆலோசனை செய்து முழுதாக மனத்தில் உணர்ந்து கொண்டவராக மேற்கொள்ளும்
போராட்டம் ஒன்றே=மதுவிறு எதிரான போராட்டம் ஒன்று மட்டுமே
புதுவாழ்க்கை கொண்டுதரும்!= நமக்கென ஒரு புதியதான நல்ல நேர்மையான சிறப்பான வாழ்வினைக் கொண்டுவந்து தரும்.
நீரோட்டம் கண்ணில் நிறுத்து!= ஆகையால் இனியும் கண்ணீர் விடுவதை நிறுத்திவிடுவாயாக!

===+++===

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Aug-15, 6:34 am)
பார்வை : 114

மேலே