Vishnudeep B - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vishnudeep B |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 25-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Nov-2021 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 6 |
சாதிப் பற்றாளனாய்
நானிருந்தால்
ஆண்டப் பரம்பரை
பெருமை பேசியே
அறிவை வளர்க்க
முயற்சித்திருக்க மாட்டேன்...!!!
மதப் பற்றாளனாய்
நானிருந்தால்
மனிதத்தை வளர்த்தெடுக்க
மாற்றுப் பாதைக்கு
மாறியிருக்க மாட்டேன்...!!!
இனப் பற்றாளனாய்
நானிருந்தால்
அழிக்கப்படும்
இனத்திற்கெதிராய்
அபயக் குரல்
எழுப்பியிருக்க மாட்டேன்...!!!
மொழிப் பற்றாளனாய்
நானிருந்தால்
மொழிபெயர்த்தவற்றை
படித்துவிட்டு
மூலாதாரத்தை
விழுங்கியிருக்க மாட்டேன்...!!!
மனிதப் பற்றாளனாய்
நானிருந்தால்
மாக்கள் பட்சிகளுக்காய்
மறந்தும் கூட
மனமிரங்கியிருக்க மாட்டேன்...!!!
உயிர் பற்றாளனாய்
நானிருப்பதால் மட்டுமே...!
உ
உன் நினைவுகளுக்கு
இன்னும் பசி
அடங்கவில்லையோ...!!!
என் கனவுகளையும்
களவாடி
தின்று தீர்க்கிறதே...!!!
துரோகியை மன்னித்து ஏற்கும் மனப்பக்குவம் உனக்கிருந்தால்
காம்பிழந்த கோடாரிக்கு
கைகொடுத்த மரத்தின் கதையை
மறந்துவிட்டு முயன்று பார்...!!!
கூடல் வரையில்
கூடியிருந்த மனமே...!
ஊடல் கண்ட பின் ஏனோ
இறங்கி வர மனமின்றி
அலங்காரம் செய்யப்பட்ட
அகங்கார சிம்மாசனத்திலேறி
சம்மணம் போட்டு
சமத்தாய் உட்கார்ந்து கொள்கிறாய்...!!!