உயிர் பற்றாளன்

சாதிப் பற்றாளனாய்
நானிருந்தால்
ஆண்டப் பரம்பரை
பெருமை பேசியே
அறிவை வளர்க்க
முயற்சித்திருக்க மாட்டேன்...!!!

மதப் பற்றாளனாய்
நானிருந்தால்
மனிதத்தை வளர்த்தெடுக்க
மாற்றுப் பாதைக்கு
மாறியிருக்க மாட்டேன்...!!!

இனப் பற்றாளனாய்
நானிருந்தால்
அழிக்கப்படும்
இனத்திற்கெதிராய்
அபயக் குரல்
எழுப்பியிருக்க மாட்டேன்...!!!

மொழிப் பற்றாளனாய்
நானிருந்தால்
மொழிபெயர்த்தவற்றை
படித்துவிட்டு
மூலாதாரத்தை
விழுங்கியிருக்க மாட்டேன்...!!!

மனிதப் பற்றாளனாய்
நானிருந்தால்
மாக்கள் பட்சிகளுக்காய்
மறந்தும் கூட
மனமிரங்கியிருக்க மாட்டேன்...!!!

உயிர் பற்றாளனாய்
நானிருப்பதால் மட்டுமே...!
உலகைக் கடந்து
பிரபஞ்சம் வரை என்
பிராண வாயுவை
கடத்திக் கொண்டிருக்கின்றேன்...!!!

எழுதியவர் : விஷ்ணுதீப் (5-Dec-21, 5:30 pm)
சேர்த்தது : Vishnudeep B
பார்வை : 59

மேலே