தனராஜ் வீரப்பன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தனராஜ் வீரப்பன் |
இடம் | : அமமானிப்பட்டு |
பிறந்த தேதி | : 16-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 11 |
நீ புறக்கணித்த அன்புகள்
உன்னை புறக்கணிப்பதில்லை !
மாறக ,
மீண்டும் காத்திருக்கின்றன
உன் புன்னகைக்காக !
மாறு வேடமிட்ட
மனசாட்சியின்
ஒப்புதல் வாக்கு மூலம் !
விடுதலை பெற்றும்
விடாத சிறைவாசம்
கூண்டுக்குள்
அடைக்கப்பட்ட
தியாகிகளின்
திரு உருவச்சிலை !
நான்கு சுவர்களும்
நியாயம் பேசுகின்றன !
உண்மைகள் உள்ளிருக்க
வெளியே ஏன் இந்த வேஷம் !
உன் விழிகளின்
ஒளிக் கற்றைகள்
உள்ளார்ந்து ஊடுருவி
இதய தேகத்தில்
இன்ப அழுத்தத்தை
இறைக்கின்றன..!
கண்களூடான
கருத்து பறிமாற்றத்தை
உன்னோடு உருவாக்கிட
என்னுள்ளே எண்ணங்கள் பல
எழுகின்றன..!
உன் வார்த்தைகளின்
வசீகரத்தால்
நரம்புகள் யாவும் கிளர்ச்சியுற்று
உச்சி முதல் பாதம் வரை
பருவ மாற்றங்கள்
படர்கின்றன..!
நித்திரையில் உன்
நினைவுகளின் தொல்லைகள்
எல்லை மீறுகின்றன..!
இவையாவும்
இயற்கையால்
இளமையில் ஏற்படும்
வேதியல் மாற்றமா?
இல்லை,
நம்மிருவருக்குமிடையில்
காதலுக்கான முன்னோட்டமா?