நான் காதலை சொல்லிய விதம்

உன் விழிகளின்
ஒளிக் கற்றைகள்
உள்ளார்ந்து ஊடுருவி
இதய தேகத்தில்
இன்ப அழுத்தத்தை
இறைக்கின்றன..!
கண்களூடான
கருத்து பறிமாற்றத்தை
உன்னோடு உருவாக்கிட
என்னுள்ளே எண்ணங்கள் பல
எழுகின்றன..!
உன் வார்த்தைகளின்
வசீகரத்தால்
நரம்புகள் யாவும் கிளர்ச்சியுற்று
உச்சி முதல் பாதம் வரை
பருவ மாற்றங்கள்
படர்கின்றன..!
நித்திரையில் உன்
நினைவுகளின் தொல்லைகள்
எல்லை மீறுகின்றன..!
இவையாவும்
இயற்கையால்
இளமையில் ஏற்படும்
வேதியல் மாற்றமா?
இல்லை,
நம்மிருவருக்குமிடையில்
காதலுக்கான முன்னோட்டமா?

எழுதியவர் : தனராஜ் (9-Apr-16, 4:10 pm)
பார்வை : 163

மேலே