kalavisu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kalavisu
இடம்
பிறந்த தேதி :  07-Mar-1962
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Dec-2017
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  9

என் படைப்புகள்
kalavisu செய்திகள்
kalavisu - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2017 1:03 pm

கண்ணாலம் முடிஞ்ச
ஏழெட்டு வருசத்துல- நாலும்
பொட்டையா பொறந்ததுன்னு
கள்ளிப்பாலை வாயில ஊத்தி
கதை முடிச்சாங்க...
நெல்லு மணியை தொண்டையில அழுத்தி
உசிரை எடுத்தாங்க...
சூடா சூப்பு கொடுத்து
குடலை வேக வைச்சாங்க...
துணியை இறுக்கமாக்கட்டி
மூச்சுத் திணற அடிச்சாங்க...

பெத்த வயிறு துடிக்குதே
பேதையாகி தவிக்குதே
தடுக்க வழியில்லாம
தனிச்சு நின்னு மயங்குதே
பிரசவ வலி தீருமுன்னே
புதைச்ச ரணம் கொல்லுதே!

கள்ளமில்லாத வயசுங்கறதால
பழிவாங்காம கிடக்குதோ?
தெய்வமா மாறி கருணையோட
காவலுக்கு திரியுதோ?
கொன்னு போடற கிழவி உயிரு
நீண்டுகிட்டே இருக்குதே?
கொல்லச் சொல்லுற பய மக்க வாழ்வும்
நிச்சலனமா கிடக்குதே.

மேலும்

Excellent 29-Dec-2017 2:37 pm
kalavisu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2017 12:44 pm

முதலமைச்சரின் "விருது வழங்கும் விழா" வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பரிசை பெறப்போவது கவிதா என்ற அறிவிப்பு வெளியானதும் கரகோஷம் விண்ணைப் பிளக்க, சக்கர நாற்காலி உருளும் சத்தம் மென்மையாக... முதலமைச்சரை வணங்கி பரிசை பெற்றுக் கொள்கிறாள். அவள் முகத்தில்தான் எத்தனை பெருமிதம்!
இப்படி ஒரு மகளைப் பெற்றதற்கு இவளுடைய அம்மா என்ன தவம் செய்தாரோ...? ஒவ்வொரு பெண்ணும் கவிதாவைப் பார்த்து நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! "சாதனைப் பெண்மணி" இவர் சாகித்யம் பெற்றவர்! என்று பாராட்டினார்.
பக்கத்திலிருந்த தனது தாயைப் பார்த்த கவிதா அதிர்ந்தாள். "என்ன அம்மா இது! ஏன் அழுகிறாய்?" என்றார்.
"ஒன்றும்

மேலும்

kalavisu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2017 11:11 am

வாக்கப்பட்டு வந்த நாளு
நெஞ்சுக்குள்ள இன்னும் இருக்கு
ஏராளமா வெக்கத்தையும்
தாராளமா நகையையும்
பூட்டித்தான் அனுப்புனாக...

ராத்திரிக்கு தோழிங்க
கேலி செஞ்சி உள்ளே அனுப்ப
கைகாலு நடுங்கிடுச்சு...
ஆசையா பக்கத்துல வந்து
அள்ளி அணைச்சு கொஞ்சினாக!
வெளையாட்டு சேதி பேசி
வெக்கத்த வெரட்டினாக!

அதிகாலை கதவைத் தட்டி
குளிச்சிட்டு வாரச் சொல்லி
விவரமா விரட்டுனா நாத்தனா?
திரும்பி வந்து பாக்கையில
நகை மரமா நிக்கிறா!
அம்புட்டும் என்னோடது...

என்னத்த நா கேட்க?
வெக்கத்த அவரு எடுத்துகிட்டாரு!
நகையை இவ புடுங்கிக்கிட்டா!
மனசை தேத்திக்கிட்டு
மறுவீடு போயி வந்தேன்

அவசரமா கிளம்பினதில
அலமாரியில வச்

மேலும்

kalavisu - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 12:15 pm

கருக்கல்ல எழுந்தாத்தான்
கலப்பையைச் சுமந்தாதான்
காவயிறுக் கஞ்சியைக்
காலத்துக்கும் குடிக்க முடியுமின்னு...

பொறுக்காத வெயிலும்
பொத்துக்கிட்டு ஊத்தற மழையிலும்
போராடி வாழ்ந்த மச்சான்
பொறந்த ரெண்டும் பொட்டைன்னு
ஆத்தா வீட்டுக்கு தொறத்தாம...

மாருல சொமந்த மச்சான்
முத்து முத்தா வேர்வைதான்
சொத்துன்னு சொல்லுவ
முந்தானையில நாந்துடைக்க
சேர்த்தணைச்சுக் கொள்ளுவ...

போராட்டம் தான் வாழ்க்கையின்னு
தத்துவமும் பேசுவ...
வாயி நிறைய சிரிக்க வச்சு
வாஞ்சையும் காட்டுவ...

மேலுக்கு முடியலைன்னு
மூலையில கிடந்தாலும்
உசிறு ஓடிக்கிட்டு இருக்குன்னு
உறுதியா நின்னேனே!
பொசுக்குன்னு மூச்சை நிறுத்தி
போ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே