kharthikeyan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kharthikeyan |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 19-Nov-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2010 |
பார்த்தவர்கள் | : 277 |
புள்ளி | : 24 |
கணிப்பொறியியலில் மேற்படிப்பினை காரியாபட்டி அருகே அமைந்துள்ள சேது பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.பறவை போல் பறக்கின்றேன் என் மன வானில்.. என் நாட்களின் தூரம் குறையவில்லை. வாழ்வின் நீளமும் தெரியவில்லை. ஆனால், அடுத்தடுத்த நொடிகள் தரும் அதிசயங்களையும், அதிர்ச்சிகளையும் சமமாய் பார்க்கிறேன், ஒரு தராசின் முள் போல்! வாழ்வில் நான் அனுபவித்ததையும், பிறர் அனுபவத்தையும் ரசித்து இங்கு பதிந்து வருகிறேன்!
ஆகாயம் பாேல்
ஆனந்தம்..
மழலை உன் பேச்சை கேட்டால்..
அடங்காத அலை பேரின்பம்..
அன்பாக எனை நீ அழைத்தால்!
பிரபஞ்சமே என்
உள்ளங்கையில்..
பிஞ்சு நீ-
என் விரல் பிடித்தால்!
தெய்வங்கள் பல
என் கண்ணில்..
நீ பூப்பூவாய்
புன்முறுத்தால்!
உனக்கென்று
இன்று ஓர்நாள் மட்டும்..
காெண்டாடினால் பாேதாது..
காரணம்-
மகிழ்ச்சியின் சுவாசத்தை
ஓர்நாள் மட்டும் சுருக்கினால்...
என் குழந்தை மனம்
தாளாது!!!