அரும்புகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆகாயம் பாேல்
ஆனந்தம்..
மழலை உன் பேச்சை கேட்டால்..
அடங்காத அலை பேரின்பம்..
அன்பாக எனை நீ அழைத்தால்!
பிரபஞ்சமே என்
உள்ளங்கையில்..
பிஞ்சு நீ-
என் விரல் பிடித்தால்!
தெய்வங்கள் பல
என் கண்ணில்..
நீ பூப்பூவாய்
புன்முறுத்தால்!
உனக்கென்று
இன்று ஓர்நாள் மட்டும்..
காெண்டாடினால் பாேதாது..
காரணம்-
மகிழ்ச்சியின் சுவாசத்தை
ஓர்நாள் மட்டும் சுருக்கினால்...
என் குழந்தை மனம்
தாளாது!!!