மீண்டும் மீண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
மீண்டும் மீண்டும்
இறத்தல் வேண்டும் நான்
உந்தன் வயிற்றில்
மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கே
எந்தன் தாயே!
வேண்டும் தீண்டும்
மழலை பருவம் நான்
உந்தன் அணைப்பில்
மீண்டும் மீண்டும்
திளைப்பதற்கே
எந்தன் தாயே!
தாண்டும் ஆண்டும்
வயது குறைய நான்
உந்தன் குழந்தையாக
மீண்டும் மீண்டும்
கொஞ்சுவதற்கே
எந்தன் தாயே!
வேண்டும் வேண்டும்
நூறாண்டு வாழ்வுனக்கு
மீண்டும் வேண்டும்
ஈரேழு ஜென்மங்கள்
நீயே அன்புத் தாயாக
எந்தன் தாயே!
பிரியமுடன்
அசுபா