அரும்புகள்

திருமணம் என்னும் பந்தத்தில்
அவரோடு கைகோர்த்து
திகப்பூட்டும் தேன்நிலவில்
இரு மனம் சேர்த்து
முழுமனதாய் அவனோடு அவளும்
முழுநிலவாய் இல்லற வாழ்வும்
இனிதாய் நிறைவேற்றி
காத்திருப்பாள் இருவிழி பூத்து..

அகத்தினில் கோலமிட்டு
அகப் பையை பூக்கவரும்
குலத் தோன்றலை எதிர்நோக்கி
பல திங்கள் காத்திருந்து
விழிநீரில் முகம் கழுவி
வலி முழுதும் தான் ஏற்று
விடியும் பொழுதெல்லாம்
வேண்டி நிற்பாள் இருகை கோர்த்து..

நட்டுவைத்த விதையிலே
தளிர்தான் விட்டதுபோல்
காத்திருந்த அவளுக்கு
கவிதையாய் கருவும் உருவாக
இன்முகத்தோடு வரவேற்று
இனிதாய் நாள் செல்ல
பத்து திங்கள் காத்திருந்து
பத்திரமாய் பெற்றெடுப்பாள் மழலையை..

பிஞ்சு விரல் பிடித்து
நெஞ்சோடு அணைத்து
உச்சிமுகர்ந்து முத்தமிட்டு
தாலாட்டு தான் பாட
அரும்பொன்று மலர்ந்தது!

இன்று மலர்ந்தது அரும்பு மட்டும் அல்ல..
அவளும் தான்
அவளின் தாய்மையும் தான்..
இந்த அரும்பை மலரச்செய்த
என் அன்னைக்கு சமர்ப்பணம்..

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (16-Nov-15, 8:46 pm)
சேர்த்தது : நந்தினி பிரதிவ்
Tanglish : arumpukal
பார்வை : 97

மேலே