நந்தினி பிரதிவ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நந்தினி பிரதிவ் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 18-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 232 |
புள்ளி | : 16 |
திருமணம் என்னும் பந்தத்தில்
அவரோடு கைகோர்த்து
திகப்பூட்டும் தேன்நிலவில்
இரு மனம் சேர்த்து
முழுமனதாய் அவனோடு அவளும்
முழுநிலவாய் இல்லற வாழ்வும்
இனிதாய் நிறைவேற்றி
காத்திருப்பாள் இருவிழி பூத்து..
அகத்தினில் கோலமிட்டு
அகப் பையை பூக்கவரும்
குலத் தோன்றலை எதிர்நோக்கி
பல திங்கள் காத்திருந்து
விழிநீரில் முகம் கழுவி
வலி முழுதும் தான் ஏற்று
விடியும் பொழுதெல்லாம்
வேண்டி நிற்பாள் இருகை கோர்த்து..
நட்டுவைத்த விதையிலே
தளிர்தான் விட்டதுபோல்
காத்திருந்த அவளுக்கு
கவிதையாய் கருவும் உருவாக
இன்முகத்தோடு வரவேற்று
இனிதாய் நாள் செல்ல
பத்து திங்கள் காத்திருந்து
பத்
அயல்நாட்டின் கொடிய விஷம் ஒன்று
என்றோ ஒரு நாள்
நம் நாட்டில் ஊடுருவி
இன்று ஒரு
மாபெரும் விருட்சமாய்
நிற்கிறது நம்முன்னே..
மதுபானம் என்றொரு பெயரில்
அனுதினமும் நம் உழைப்பை
உறிஞ்சிக் குடித்துக்கொண்டு
இன்று நம்
உயிரையும் குடித்துக்கொண்டு
அதனின் தாகம் தனிய
உலவுகிறது நமக்குள்ளே..
கஷ்டப்பட்டு சம்பாதித்த காசெல்லாம்..
இன்று கடலுக்குள் தொலைத்த
தங்கம் போல
காணாமல் போகிறது..
வீரத்தையும் மானத்தையும்
போற்றி வளர்த்த இம்மண்
இன்று பல
குடிகாரர்களையும் வளர்க்கிறது...
அப்பா வரவில்லை என்று
சிறு பெண்பிள்ளைகளும்..
அண்ணன் வரவில்லை என்று
ஆசை தங்கையும்..
கணவன் வரவில்லை எ
தன்னலம் இல்லா மகனை
பெற்று தந்த பூமி தாய்க்கு
ஏன் இவ்வளவு அவசரம்?
பார் போற்றும் நாயகனை இன்னும்
கொஞ்சகாலம் விட்டுவைத்திருக்
கலாம்..
அவர் கண்ட கனவினை
2020-குள் நிறைவேற்றும்வரை வாழவைதிருக்
கலாம்..
எளிமைக்கு உருவம் தந்த
எங்களின் உயிரை
அதற்குள் எடுத்துவிட்டாயே!
தாயே நீ
இம்மண்ணில் விதைத்தது
ஒரு கலாமை..
ஆனால் இன்று
முளைத்திருப்பது
என்னில் அடங்கா கலாம்கள்..
அவர் நடந்த பாதையில்
இன்று நாங்கள் பயணிக்கிறோம்
அவரின் இலக்கை நோக்கி..
நல்வழி பாதையில் சென்று
அனுதினமும் அவரை அர்ச்சனைசெய்வோம்
எங்கள் கனவுகளை காணிக்கை ஆக்கி..
தன்னலம் இல்லா மகனை
பெற்று தந்த பூமி தாய்க்கு
ஏன் இவ்வளவு அவசரம்?
பார் போற்றும் நாயகனை இன்னும்
கொஞ்சகாலம் விட்டுவைத்திருக்
கலாம்..
அவர் கண்ட கனவினை
2020-குள் நிறைவேற்றும்வரை வாழவைதிருக்
கலாம்..
எளிமைக்கு உருவம் தந்த
எங்களின் உயிரை
அதற்குள் எடுத்துவிட்டாயே!
தாயே நீ
இம்மண்ணில் விதைத்தது
ஒரு கலாமை..
ஆனால் இன்று
முளைத்திருப்பது
என்னில் அடங்கா கலாம்கள்..
அவர் நடந்த பாதையில்
இன்று நாங்கள் பயணிக்கிறோம்
அவரின் இலக்கை நோக்கி..
நல்வழி பாதையில் சென்று
அனுதினமும் அவரை அர்ச்சனைசெய்வோம்
எங்கள் கனவுகளை காணிக்கை ஆக்கி..
என் வர்ணனையில்
ஒரு வாக்கியமாய் மாறி
புது வடிவம் தந்தவளே..
தோழி என்னும் மொழியில்
நீ ஒரு கவிதை..
அதை நான் தினமும் வாசிக்கிறேன்..
நம் நட்பை மட்டுமே நேசிக்கிறேன்..
காற்று உதிர்ந்தாலும்
காலம் முதிர்ந்தாலும்
கடல் கவிழ்ந்தாலும்
கடிகாரம்
பின்னோக்கிச் சுழன்றாலும்
மண்ணில் நட்சத்திரம் பூத்தாலும்
மரங்கள் படுகிடையாய் வளர்ந்தாலும்
எது
எப்படியானாலும்...
நட்பு காதலாகவோ!
காதல் நட்பாகவோ!
மருவி விடாது.
பாலையும்
நீரையும்
கலந்து வைத்தால்
அன்னப்பறவை
பாலைத்தான்
பருகுமாமே!
அதுபோலத்தான்
நட்பையும் காதலையும்
கலவை செய்தாலும்
நல்ல உள்ளங்கள்
காதலென்றால்
கடைசிவரை
காதலையே பருகும்.
நட்பென்றால் கடைசிவரை
நட்பென்றே உருகும்...!
................ ..................... ...................
உங்கள் விம
சரியாக மணி 6. தன் அலுவலகப் பணிகளை துரிதமாக முடித்து விட்டு விரைவாக கிளம்பினர் முத்தையா. நகராட்சி அலுவலகத்தில் கிளெர்க்-ஆக பணியாற்றுகிறார் முத்தையா. தினமும் இப்படி இவர் எங்கு தான் செல்கிறார். இன்று அவரை பின்தொடர்ந்து சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணி பின்தொடர்ந்தான் சந்துரு. முத்தையா வேலை செய்யும் அலுவலகத்திற்கு முன்பு தேநீர் கடை வைத்திருப்பவன் தான் சந்துரு. முத்தையா மீது மிகவும் அன்பு கொண்டவன். குடும்பம் இல்லாத முத்தையாவுக்கு மகனாய் இருக்க நினைப்பவன். பின் தொடர்ந்து சென்று பார்க்கையில் முத்தையா பூச்செடி விற்பவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக தான் கேட்ட விலைக்கு செடிகளை வாங்கிக்கொ
வெள்ளைத் தாடி கொண்டவர் வாலி
வெள்ளை உடை பூண்டவர் வைரமுத்து
வேறொன்றும் வித்தியாசம் இல்லை
இவர்களிலும், இவர்களின் கவிதைகளுக்கும்
எண்ணங்களின் வலிமை வாலி என்றால்
அந்த எண்ணக்களின் பரிசு வைரமுத்து
இவர்களின் கடவுள் கண்ணதாசன் என்பேன்
இவர்களின் கவிதைகளை
பூஜை செய்தவர் இளையராஜா என்பேன்
காலம் உள்ளவரை ....................................
என்னைவிட என் கண்களுக்கு
என்ன ஒரு நம்பிக்கை உன் மீது.....
துன்பமான நேரங்களில்
அழுதுவிட கூடாது என மனம் துடித்தாலும்
கண்கள் மட்டும் ஏனோ கண்ணீர்வடிகின்றன
உன்னை கண்டவுடன் ......
என் இருவிழி கண்ணீரை
உன் ஒரு விரல் கொண்டு துடைப்பாய் என்றே........