காலம் தந்த கலாம் அவர்கள்

தன்னலம் இல்லா மகனை
பெற்று தந்த பூமி தாய்க்கு
ஏன் இவ்வளவு அவசரம்?

பார் போற்றும் நாயகனை இன்னும்
கொஞ்சகாலம் விட்டுவைத்திருக்
கலாம்..

அவர் கண்ட கனவினை
2020-குள் நிறைவேற்றும்வரை வாழவைதிருக்
கலாம்..

எளிமைக்கு உருவம் தந்த
எங்களின் உயிரை
அதற்குள் எடுத்துவிட்டாயே!

தாயே நீ
இம்மண்ணில் விதைத்தது
ஒரு கலாமை..
ஆனால் இன்று
முளைத்திருப்பது
என்னில் அடங்கா கலாம்கள்..

அவர் நடந்த பாதையில்
இன்று நாங்கள் பயணிக்கிறோம்
அவரின் இலக்கை நோக்கி..

நல்வழி பாதையில் சென்று
அனுதினமும் அவரை அர்ச்சனைசெய்வோம்
எங்கள் கனவுகளை காணிக்கை ஆக்கி..

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (2-Aug-15, 9:38 am)
பார்வை : 198

மேலே