அயல் கவிதை
*
கலாமுக்கு அஞ்சலி.
*
அழகும் அமைதியும்
வளமும் செயல்திறனும்
உடையதாய் இந்தியத் திருநாடு
2020 – ஆம் ஆண்டில் வல்லரசாக
மெய்ப்படுவது உன்
தொலைநோக்கின் வெளிப்பாடு!
அறிவுச்சுடரே!
எண்திசையிலும் எங்கள் தீவிலும்
உன் இன்சுவைக் குரல்
ஒலித்த வண்ணமிருக்கிறது
கவின்மிகு பாரதத்தின்
குழந்தைகளையும்
இளைஞர்களையும்
வழிநடத்திச் சென்றவரே!
நீருள்ளளவும் நிலமுள்ளளவும்
காடுள்ளளவும் கவிதையுள்ளளவும்
வையம் உள்ளவரை
வாழும் உன் வான் புகழே!
தைவான் கவிஞர். யூஷி.
ஆதாரம் ; தி இந்து – 02-08-2015.
*