கவியாருமுகம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவியாருமுகம் |
இடம் | : தேவகோட்டை |
பிறந்த தேதி | : 27-Mar-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 2129 |
புள்ளி | : 487 |
பாவையே
உன் பார்வையில்
ஒரு தேடல் ...
பாவையே
உன் மௌனத்தில்
ஒரு தேடல் ...
பாவையே
உன் நளினத்தில்
ஒரு தேடல் ...
தேகம்
உள்ளவரை
தேடல் இருக்கும்
தேகம் அழிந்த
பின்னும் உன்
நினைவுகள்
நெஞ்சில் இருக்கும்
பாவையே
உன் பார்வையில்
ஒரு தேடல் ...
பாவையே
உன் மௌனத்தில்
ஒரு தேடல் ...
பாவையே
உன் நளினத்தில்
ஒரு தேடல் ...
தேகம்
உள்ளவரை
தேடல் இருக்கும்
தேகம் அழிந்த
பின்னும் உன்
நினைவுகள்
நெஞ்சில் இருக்கும்
காற்றினிலே பறந்த
கூந்தல்
கண்களிலே காந்த
பார்வை
இதழினிலே ஆயிரம்
முத்தங்கள்
மௌனமே காதலின்
மொழியாய்
ஜனிக்கிறது உன்னுள்
பெண்ணே காதல்
பிறப்பது எப்பொழுது ?
விழி மோதலால்
காதல் மூண்டது
கைப்பற்றி கொண்டது
காதல் கோட்டை
இதயம்
அன்பே
நீ சிரிக்கும் போது
என் மனம் குதூகலிக்கிறது
நீ அழும் போது
என் மனம் குழப்பமாகிறது
நீ உறங்கும் போது
என் மனம் அமைதியாகிறது
நீ விழிக்கும் போது
என் மனம் உயிர் பெறுகிறது
அன்று
உதிரத்தை இழந்து
உலகிற்கு உன்னை
உயிர் கொடுத்த அன்னை
இன்று
உணர்ச்சிகளை அடக்கி
உயிரற்ற ஜடமாய்
உன்னை பெற்றதனால்
வாழ்கிறாள் ...
அன்று
உதிரத்தை இழந்து
உலகிற்கு உன்னை
உயிர் கொடுத்த அன்னை
இன்று
உணர்ச்சிகளை அடக்கி
உயிரற்ற ஜடமாய்
உன்னை பெற்றதனால்
வாழ்கிறாள் ...
விதைத்தவன்
விண்ணை பார்த்தான்
மழை பெய்தது
மண் நனைந்தது
பயிர் வளர்ந்தது
பணம் கிடைத்தது
விவசாயி மனம்
மகிழ்ந்தது அன்று
விதைத்தவன்
விண்ணை பார்த்தான்
மழை பொய்த்தது
மண் வறண்டது
பயிர் வாடியது
பணம் போனது
விவசாயி மனம்
நொந்தது இன்று
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா ...,
என் காதலின் நிலை ...!
உடுமலை சேரா முஹமது
வெண்ணிலாவும்
தஞ்சமடி உன் ஒளி வீசும்
முக அழகில்
வான் முகிலும்
தஞ்சமடி உன் கார்
கூந்தல் அழகில்
வான வில்லும்
தஞ்சமடி உன் நெற்றி
புருவ அழகில்
வண்ண கிளியும்
தஞ்சமடி உன் கொஞ்சும்
குரல் அழகில்
கட்டி தங்கமும்
தஞ்சமடி உன் பொன்
நிற மேனி அழகில்
வண்ண மீனும்
தஞ்சமடி உன் கரு
விழி அழகில்
நானும் தஞ்சமடி
உன் அழகான
மன அழகில்
மலருக்குள் புகுந்து
வாசம் தந்தாய்
காற்றினில் புகுந்து
சுவாசம் தந்தாய்
மழையில் புகுந்து
தாகம் தீர்த்தாய்
இருளில் புகுந்து
ஒளியை தந்தாய்
மனதில் புகுந்து
மௌனம் கலைத்தாய்
விழியில் புகுந்து
விடியலை தந்தாய்
உன் நினைவில்
நானாக என் நினைவில்
நீயாக
நடை பாதையே
எங்கள் வீடு
வாகன புகையே
எங்களின் சுவாசம்
புல்லினமே
எங்களின் பஞ்சு மெத்தை
தண்ணீரே பாதிநாள்
எங்களின் உணவு
கிழிந்த துணியே
எங்களின் ஆடை
இதுவே
எங்களின் வாழ்க்கை