காதல்

வெண்ணிலாவும்
தஞ்சமடி உன் ஒளி வீசும்
முக அழகில்

வான் முகிலும்
தஞ்சமடி உன் கார்
கூந்தல் அழகில்

வான வில்லும்
தஞ்சமடி உன் நெற்றி
புருவ அழகில்

வண்ண கிளியும்
தஞ்சமடி உன் கொஞ்சும்
குரல் அழகில்

கட்டி தங்கமும்
தஞ்சமடி உன் பொன்
நிற மேனி அழகில்

வண்ண மீனும்
தஞ்சமடி உன் கரு
விழி அழகில்

நானும் தஞ்சமடி
உன் அழகான
மன அழகில்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (22-Sep-16, 1:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 279

மேலே