காதல்
மலருக்குள் புகுந்து
வாசம் தந்தாய்
காற்றினில் புகுந்து
சுவாசம் தந்தாய்
மழையில் புகுந்து
தாகம் தீர்த்தாய்
இருளில் புகுந்து
ஒளியை தந்தாய்
மனதில் புகுந்து
மௌனம் கலைத்தாய்
விழியில் புகுந்து
விடியலை தந்தாய்
உன் நினைவில்
நானாக என் நினைவில்
நீயாக