மணநாளும் மரணமானது

எப்படி ஒருவன் அவன் மரணத்தை வாழ்நாளில்
ஒரு தடவை மட்டுமே தழுவ முடியுமோ -அது போல
மணநாளும் ஒரு தடவை தான் தழுவ வேண்டும்-உண்மையில்
மரணப்படுக்கையில் இருப்பவரை கண்டு நாம் கலங்க வேண்டியது இல்லை -
ஏனெனில் மரணம் தான் அவர்களை ஆள போகிறது - ஆனால்
மணமேடையில் இருப்பவரை பெற்ற ஒவ்வொருவரும் கலங்க வேண்டும்-ஏனெனில்
கல்யாணம் என்ற பெயரில் உயிருடன் இருக்கும் போது
வாய்க்கரிசி போட்டுவிடக்கூடாது என்பதற்காகவே - பலபேர்
வாழ்க்கையில் கல்யாணம்கூட ஒரு உயிர்கொல்லியாக
உட்புகுந்து கொஞ்ச கொஞ்சமாக உயிரை உருவிக்கொண்டு இருக்கிறது -
உண்மையில் நேசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வலி மரணத்தைவிட கொடியது என்று........

எழுதியவர் : prabavathi (23-Aug-16, 11:05 am)
சேர்த்தது : பிரபாவதி
பார்வை : 68

மேலே