நல்லது நல்லது இவை எல்லாம் நல்லது

நல்லதையே கேட்போம் ,பார்ப்போம்

நல்லதையே சொல்வோம் ,செய்வோம்

நல்லவரையே நாடுவோம் அவர் தம்

நல்வார்த்தைக்கு செவிசாய்த்து -அவரை

நல்ல குருவாய் ஏற்போம்

நல்லவனாய் வாழ்ந்து காட்டி

நம்மை சூழ நல்லவரைப் பெருக்குவோம்



வன்மையை அறவே ஒதுக்குவோம்

நாவை அடக்கி நம்முள்

நல்ல ஒழுக்கம் வளர்ப்போம்

எல்லார்க்கும் நன்மையே செய்யும்

நல்ல பசு போல் இருப்போம்

ஆயுதங்கள் தங்குவதை அறவே ஒழிப்போம்

இன்ன செய்தாரை மன்னித்து விடுவோம்

அவரை நல்லோராய் மாற்றிட

நம்மால் முடிந்ததை செய்வோம்

பிறப்பில் யாரும் தீயோர் அல்லர்


அறம் தான் நம்மை என்றும்

காக்கும் வளர்க்கும்

நம் பிள்ளைகளை நல்லோராய் வளர்ப்போம்

அவர்களுக்கு வழி வழி வந்த

அறவழி காட்டுவோம்

வன்மம்,கொடூரம்

கனவிலும் எண்ணுதல் ஆகாது

என்று அழகாய் சொல்லி அழகாய்

வளர்ப்போம்

இது காந்தி மகானின் கனவு நாடு

வன்மைக்கு இங்கு இடமே ஏதும் இல்லை

காந்தி மகானின் கனவு நிறைவேற

முன்னேறி வளர்வோம் உயர்வோம்

சாந்தி சாந்தி சாந்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Aug-16, 11:31 am)
பார்வை : 86

மேலே