கோதையும் திருபாவையும்

ஆண்டாளின் திருப்பாவை
💞💞💞💞💞💞💞💞💞💞💞
கோதையே உன் திருப்பாவை
“சங்கத்தமிழ்மாலை” யே
கண்ணனை வணங்கிய
கலியுக பெண்களில்
நீயே முதன்மை பெற்றவளன்றோ!

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாய் கொண்டாய்
வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாய் நினைந்தாய்
அங்குள்ள மூர்த்தியை கிருஷ்ணனாகவே பார்த்தாய்
கோபியர்களுக்கு குறையா
நோன்பினை நீ செய்தாய்
💕💕💕💕💕💕💕💕💕💕

உன் திருப்பாவையில், வடமதுரை மன்னனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் முன்னர் செய்த பாவங்களும், வரப் போகிற பாவங்களும் நெருப்பில் இட்ட தூசி போல ஒழியும் என்றாயே
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

அதிகாலை சப்தங்களை சொல்வதிலும், தோழி துயிலை கும்பகர்ணனுக்கு ஒப்பிடுவதிலும், இந்த முப்பது பாசுங்களையும் பாடுவர்களுக்கு கிடைக்கும் பலன்களை சொல்லுவதிலும் ஆண்டாள்
நாச்சியாரே உனக்கு நிகராக யாரை நான் ஒப்பிட.
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

பேதையே நீ போகப் பொருள் அல்ல,பகவானையே எழுப்பி
அவனையே அடை என
பூமி பெண்களை அரங்கன் பாதம் பற்ற
அழைத்தாயே !!
💞💞💞💞💞💞💞💞💞💞
உன் 142 பாசுரஙகள் கொண்ட ‘நாச்சியார் திருமொழி’ யில் தன் காதலனை அடைய செய்ய வேண்டிய பிராத்தனைகள்,
குட்டி தெய்வங்களிடம் வேண்டுதல், இயற்கையிடம் வேண்டுதல்,
பறவைகளிடம் வேண்டுதல்,
’திருமாலை’யே தன் மணவாளனாகத் தேர்ந்தெடுத்து அவனேயே மணமுடிப்பதை ‘வாரணமாயிரம்’ என்ற பாசுரஙகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விதம் மானிடப்பெண்ணிடம் இருக்குமா!!!
என்று வியக்க செய்த உன் எழிலை
எப்படி நானுரைப்பேன் கோதையே
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

திருவரங்கனை உன்னுடைய தேன்தமிழால், ’செங்கோலுடைய திருவரங்கச் செல்வன்’ என்றாய்
‘நளிர் அரங்க நாகனையான்’ என்றும், ‘என்னமுதர்’ என்றும் பலவாறாக நாச்சியார் திருமொழியில் அழைத்தாய்
அரங்கனுக்கு என 10 பாசுரங்களை பாடினாய்.
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
💓💓💓💓💓💓💓💓💓💓💓
அரங்கனும் உன் பக்தியின் யுக்தி
கண்டு அரண்டல்லவா உன்னை
அணைத்துக்கொண்டான்.
மீண்டும் ஒருமுறை நீ இங்கு வரமாட்டாயா?
அப்பொழுது உன் ஏவல்
கேட்கும் பணிபெண்ணாய் இந்த பந்தார்விரலி மாறமாட்டேனா?😨😨😨😨😨😨😨😨🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

எழுதியவர் : பந்தார்விரலி (23-Aug-16, 9:53 am)
சேர்த்தது : பந்தார்விரலி
பார்வை : 129

மேலே