உன் சங்கதி வாழ்வதற்கு
தக்காளி ,வெங்காயம் விளை நிலம் எங்கே
உண்ணும் உணவும் உடை இல்ல நிலை இங்கே
மறந்து மறைத்து போனது எங்களின் நிலைமை
மூன்று மாதத்தில் நெல் சாகுபடி
வருமானமோ நாங்கள் சாகும் படி .....
மாறும் எங்கள் காலம்
தங்கம் இப்போ உங்க காலம்
வரும் நெல்லை தேடி அலையும் காலம்
சிறிய வீடு சிறிய காரும் போதும் எனக்கு
இது தான் உன் எதிர்பார்ப்பு
இயற்கை சீற்றம் வந்தால் இதில்
இல்லை பாதுகாப்பு
உண்ணும் உணவு நாங்கள் தயாரிப்பது
உங்களுக்காக இதை நீ
புரியாதவனாக இருக்கிறாய்
வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு
புதிய இயந்திரம் வந்தாலும் இதில்
அனைத்தும் கிடைத்து விடுமா .......
சிந்தனை என்னும் வார்த்தைகளை
சிந்திக்க மறந்து விட்டாய் என் தோழா
வழி விடு வழி விடு உன் சங்கதி வாழ்வதற்கு
மு.க.ஷாபி அக்தர்