விவசாயி நிலை

விதைத்தவன்
விண்ணை பார்த்தான்
மழை பெய்தது
மண் நனைந்தது
பயிர் வளர்ந்தது
பணம் கிடைத்தது
விவசாயி மனம்
மகிழ்ந்தது அன்று

விதைத்தவன்
விண்ணை பார்த்தான்
மழை பொய்த்தது
மண் வறண்டது
பயிர் வாடியது
பணம் போனது
விவசாயி மனம்
நொந்தது இன்று

எழுதியவர் : கவி ஆறுமுகம் (27-Sep-16, 4:00 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : vivasaayi nilai
பார்வை : 247

மேலே