போராட்டம்

பூமியை கீரி

வெளியே வந்த
பொழுது

எனக்குள் ஒரு
வெற்றி களிப்பு
ஒரு பூரிப்பு

அப்பொழுது

தெரியவில்லை

என் வாழ் நாள்

போராட்டமாக

இருக்கும் என்றூ

ஆடு,மாடுகள்
கடித்து

மனிதர்கள்
கைய்யால்
உடைபட்டு

வெய்யிலில்
காய்ந்து

மழையில்
நனைந்து

அசுரக் காற்று

என்னை உலுக்க

ஆடி,ஆடி ஓய்ந்து

இதையெல்லாம்
பொருத்து

திடீர் என
ஒரு நாள்
கோபப்பட்டு

பித்து பிடித்தவன்
உடைகளை கலைந்து ,

நிர்வானமாய் நிற்பதைப்
போல

இலைகளை உதிர்த்து

நிர்வானமாய் நின்று

காலம் வந்து என்னை

சமாதானப் படுத்திய
பின்

துளிர்த்து தளிர்த்து

அப்பப்பா நான்
பிறந்த போது

ஏற்பட்ட சந்தோசம்
எல்லாம்

காலத்தால் கானாமல்
போனது

ஆனாலும் சின்ன
சின்ன சந்தோசங்கள்

பிள்ளைகள் மழலை
பேசி எனக்கு கீழே

விளையாடும் பொழுது

வெய்யிலைத் தாங்கி

மற்றவர்களுக்கு நிழல்
கொடுக்கும் பொழுது

மழைக்கு யாரேனும்
ஒதுங்கும்

போது மட்டும்
சிறிது கலக்கத்துடன்

இந்த சந்தோசங்கள்
நடுவிலும்

சிறிது பயத்தோடு
வெட்டுப் படப்போவதை
நினைத்து

ஆனாலும் எதற்கும்
தயாராகவே

"நான்"!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (27-Sep-16, 11:46 am)
Tanglish : porattam
பார்வை : 226

மேலே