நல்ல உள்ளங்கள்

காற்று உதிர்ந்தாலும்
காலம் முதிர்ந்தாலும்
கடல் கவிழ்ந்தாலும்
கடிகாரம்
பின்னோக்கிச் சுழன்றாலும்


மண்ணில் நட்சத்திரம் பூத்தாலும்
மரங்கள் படுகிடையாய் வளர்ந்தாலும்



எது
எப்படியானாலும்...


நட்பு காதலாகவோ!
காதல் நட்பாகவோ!
மருவி விடாது.


பாலையும்
நீரையும்
கலந்து வைத்தால்
அன்னப்பறவை
பாலைத்தான்
பருகுமாமே!



அதுபோலத்தான்
நட்பையும் காதலையும்
கலவை செய்தாலும்


நல்ல உள்ளங்கள்



காதலென்றால்
கடைசிவரை
காதலையே பருகும்.


நட்பென்றால் கடைசிவரை
நட்பென்றே உருகும்...!




................ ..................... ...................






உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது...

எழுதியவர் : திருமூர்த்தி.v (25-Apr-15, 4:22 pm)
Tanglish : nalla ullangal
பார்வை : 382

மேலே