அகவிலைப் படி

அகவிலைப் படி...

எப்போது அறிவிப்பு வரும்..???
ஐந்து விழுக்காடா... பத்து விழுக்காடா..??
வந்தால் சிறு கடனை அடைக்கலாம்
கடன் பட்ட நடுத்தர வர்க்கத்தினருக்கு
ஆறுதல்... அகவிலைப்படியேற்றம்...!!

என்னவெல்லாம் வாங்கி சேர்க்கலாம்
சந்தையில் புதிதாய் என்னவெல்லாம் வந்திருக்கிறது??
உபரியாய் கண்டதையும் வாங்கி
ஊதாரி செலவுகளில் உள்ளம் களிக்கும்
மேல்மட்ட வர்க்கத்தினருக்கு
கொண்டாட்டம் அகவிலைப்படியேற்றம்....!!

"ஏம்பா... பாரிஸ் கார்னர் போக
நாற்பது ரூபா தானே வாங்குவே
அறுபது கேட்கிறியே நியாயமா??"

"அதான் அரசாகம் சம்பளத்த ஏத்திடிச்சே
நான் ஏத்த மாட்டனா??"

புரியாமல் கேட்கும் ஆட்டோ காரனுக்கு
தனியார் துறையின் பணியாளரும்
கூலிக்காரனும் எப்படி புரிய வைப்பது??

சில ஆயிரங்களே ஊதியம் பெறும்
தனியார் துறை பணியாளர்களுக்கு
கூலி வேலை செய்பவர்களுக்கு
திண்டாட்டம் அகவிலைப் படியேற்றம்...

அகவிலைப்படி அறிவிப்பு நாளன்றே
அத்தனை விலைவாசியும்
ஆனந்தப் படிகளில் ஏறிக் கொள்கிறது..
அடித்தட்டு மக்கள் சரிகிறார்கள்
அதல பாதாளத்திற்கு....

யார் இந்த அகவிலைப்படி முறையை
அமல்படுத்தியது???
ஒருசாரார் மட்டும் உல்லாசமாக இருக்க...!!

அகவிலைப்படி எரிபொருளில்
விலைவாசி ராக்கெட்
விண் தொட சீறித்தான் பாய்கிறது...

உச்சாணி கிளைக்கு ஏறிக்கொண்டிருக்கும்
விலைவாசியை
கீழிறக்க தெரியாத அரசாங்கம்
ஏழை எளியோருக்கு இன்னல் தரும்
அகவிலைப்படிக்கு என்றுதான்
ஆணி அடிக்கப்போகிறது போகிறது...??

அகவிலைப்படி ஏற்றம்...
அடித்தட்டு மக்களின்
அடிவயிற்றில் அடிக்கும் சம்மட்டி என்று
என்றுதான் உணரப்போகிறது
இந்த பாழாய்ப்போன அரசாங்கம்..??!!

எழுதியவர் : சொ.சாந்தி (25-Apr-15, 4:10 pm)
பார்வை : 93

மேலே