பக்குவமடைந்த போது
"அப்பா
பசங்களோட வெளில போற
செலவுக்குப் பணம் வேணும்''
சட்டைப்பை
அண்டர்வேர் துழாவி
நூறு ரூபாய் நீட்டிய
மறுகணமே,
பஸ்சுக்குப் பத்துரூபா
இந்தாடான்னு
மஞ்சப்பொடி டப்பாவில்
ஏழு ரூபாயும்,
முந்தானையில் முடிந்திருந்த
மூன்று ரூபாயையும்
சேர்த்துத் தந்தபோது....
புரிந்தே போனது
குடும்பக் கஷ்டமும்
சிக்கனத்தின் அவசியமும்.