மழையென்பது யாதென - கற்குவேல் பா

"மழையென்பது யாதென"
------------------------------------------

விலைக்கு விற்கப்பட்ட ,
விளைநிலங்களை கேளுங்கள்..
விடிந்ததும் அரங்கேற்றிவிடும் !

மண்ணோடு மக்கிப்போன,
விதைத் துளிகளைக் கேளுங்கள் ..
விடயம் புரிந்துவிடும் !

கடைசி துளிநீரில் கரணமிடும் ,
மீன் குஞ்சுகளைக் கேளுங்கள் ..
அழுது தீர்த்துவிடும் !

ஆற்றோரம் சுற்றித் திரியும்,
ஆநிரைகளைக் கேளுங்கள் ..
ஆவேசத்துடன் சொல்லிச் செல்லும் ..

வீழ்ந்து கிடக்கும் ஆலமரத்தின் ,
ஆணிவேர் சென்று கேளுங்கள் ..
ஒருவேளை எழுந்து சொல்லக்கூடும் !

ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் ,
மேலைநாட்டு பறவைகளிடம் கேளுங்கள் ..
வந்த சங்கதி சொல்லும் !

மறந்தும் தவறியேனும் ,
விவசாய தோழனிடம் கேட்டிராதீர் ..
உயிர்த்துறக்கும் உண்மை சொல்லக்கூடும் ,
மழையென்பது யாதென !!!


-- கற்குவேல். பா .

[ வாய்ப்பளித்த தோழர் ' கனா காண்பவன் ' அவர்களுக்கு நன்றி ]

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (25-Apr-15, 3:14 pm)
பார்வை : 215

மேலே