இனி ஒரு விதி செய்வோம்

அயல்நாட்டின் கொடிய விஷம் ஒன்று
என்றோ ஒரு நாள்
நம் நாட்டில் ஊடுருவி
இன்று ஒரு
மாபெரும் விருட்சமாய்
நிற்கிறது நம்முன்னே..

மதுபானம் என்றொரு பெயரில்
அனுதினமும் நம் உழைப்பை
உறிஞ்சிக் குடித்துக்கொண்டு
இன்று நம்
உயிரையும் குடித்துக்கொண்டு
அதனின் தாகம் தனிய
உலவுகிறது நமக்குள்ளே..

கஷ்டப்பட்டு சம்பாதித்த காசெல்லாம்..
இன்று கடலுக்குள் தொலைத்த
தங்கம் போல
காணாமல் போகிறது..

வீரத்தையும் மானத்தையும்
போற்றி வளர்த்த இம்மண்
இன்று பல
குடிகாரர்களையும் வளர்க்கிறது...

அப்பா வரவில்லை என்று
சிறு பெண்பிள்ளைகளும்..
அண்ணன் வரவில்லை என்று
ஆசை தங்கையும்..
கணவன் வரவில்லை என்று
அன்பு மனைவியும்..
மகன் வரவில்லை என்று
பெற்ற தாயும்..
எங்கோ அழுவது
யாருக்கும் கேட்கவில்லையா?

ஆசையாய் வாழலாம் என்று
பாடுபட்டு உழைத்து
சேர்த்து வைத்த
காசை எல்லாம்
கரைத்துவிட்டு
இன்று பல நோய்களோடும்
தீராத ஆசைகளோடும்
உலா வரும்
இந்நாட்டு குடிமக்களுக்கு
தானும் அழிவதோடு நில்லாமல்
தன் அடுத்த தலைக்கட்டும்
அழிக்கிரோமென்று
இன்னமுமா புரியவில்லை?

இன்று அதன் வீரியம்
தொட்டு விட்டது அதன் உச்சியை..
கல்வி கற்கும் மாணவமணிகளையும்
குலம் போற்றும் பெண்மணிகளையும்
அதனுள் மூழ்கடிக்க
எத்தனித்து விட்டது..

இனியும் பொறுத்திருந்தால்
நம்மை பெற்றெடுத்த நாடு
நம்மை தூற்றும்..
இனி வரும் காலம்
நம் அறியாமையை எண்ணி
கூனி குருகும்..

இனி ஒரு விதி செய்வோம்..
நம் நாட்டின்
விதியை மாற்றியமைப்போம்..
பூரண
மதுவிலக்கை வரவேற்ப்போம்..

இன்றே செய்வோம்..
அதை நன்றே செய்வோம்..

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (3-Aug-15, 7:02 pm)
சேர்த்தது : நந்தினி பிரதிவ்
பார்வை : 586

மேலே