புறப்படு தோழா

புறப்படு தோழா !!!
தூரக்கிழக்கில்
பார்வை வீச
படுகுழியென்று
அச்சமா ???
முழங்கால் வரைக்கூட
முழுதும் தேயலாம்
முன்னேறு.....
நாளையும் விடியும்
என்பது
என்ன நிச்சயம் .....
பயந்தவன் பெயரை
சரித்திரம் மறைக்கட்டும் !!!
துணிந்தவன் பெயரை
சரித்திரம் பொறிக்கட்டும் !!!
புறப்படு தோழா ...
புல்நுனியில்
புவியைச்
சுழலவைப்போம்.

*****************************

எழுதியவர் : மணிமாறன் (3-Aug-15, 6:40 pm)
சேர்த்தது : மணிமாறன்இ
பார்வை : 174

மேலே