sangeetha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sangeetha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Aug-2017
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  2

என் படைப்புகள்
sangeetha செய்திகள்
sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 1:03 pm

அடுக்களைக்குள்
அழிந்துபோன
பிரம்மாக்களை
நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா?

கவிஞராய் ,நிபுணராய்,நாட்டியராய் ,
ஓவியராய்,வீராங்கனையாய் ...
இன்னும் எத்தனையோ
சாதனைகள் படைக்கும்
பிரம்மாக்களை
இழந்து விட்டோமென
நீங்கள் வருந்தியதுண்டா?

கயல்விழியும் ,மெல்லிடையும்,
கார்கூந்தலும்
அடையாளமென
வகைப்படுத்தி விட்டீர்!
மறைக்கப்பட்ட எங்களின்
அடையாளங்கள்
இன்னும் எத்தனையோ?

உண்மையை
உரக்கச் சொன்னால்,இங்கே
செவிசாய்க்க
சிலர் இருப்பர்
இதோ உங்களைப்போல !

கண்டுவைத்த
கனவுகளை எண்ணி ,
கசிந்துருகும்,
கன்னிகளைப்பற்றி
என்றாவது வியந்ததுண்டா?
என்னைப்போல,
ஆதங்கம் உங்களுக்கும்
இருக்குமெ

மேலும்

ஒவ்வொரு பெண்ணும் சாதனைப் பெண் தான் அவளை போன்ற இதயம் ஆண்களுக்கு இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 1:19 pm
sangeetha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 12:57 pm

அதிகாலை உன்
அழைப்பே எனக்கு
அலாரமாகிப் போனது !

சாய்ந்து சாய்ந்து நீ
பார்க்கும்போது ,
பாடல் ஒன்று நினைவுக்கு வரும் !

பழைய சாதம் வைத்தால்
பாசாங்கு செய்வாய் !
பட்சணங்கள் கண்டால்
ஆர்பரித்து அருகே வருவாய் !

என் சிறு குழந்தைகளின்
உணவூட்டலுக்கு
உதவி செய்தாய் !...

யாரும் இல்லா நேரம்
கரைந்து கரைந்தே
வருந்திப் போவாய் ...

காகமே ! நீ கரைந்தே
எம்மையும்
அன்பால்
கரைய
வைக்கிறாய் ...

வாழ்ந்து போகட்டுமே !
சில பற்றற்ற
மனிதர்களுக்கு மத்தியில்
பாசமாக
இந்த காகங்களும் !.....

-சங்கீதா செந்தில்

மேலும்

மனிதம் வாழும் இதயம் அழகான உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 1:17 pm
கருத்துகள்

மேலே